டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி - இந்திய வீரர் அமித் பங்கால் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டைப் போட்டியின் முதல் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான அமித் பங்கால் தோல்வி அடைந்தார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டைப் போட்டியின் முதல் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான அமித் பங்கால் தோல்வி அடைந்தார். முதல் சுற்றில் கொலம்பிய வீரர் மார்ட்டினெஸுடன் அமித் பங்கால் மோதினார். 3 சுற்றுகளாக நடந்த இந்த ஆட்டத்தில் கொலம்பிய வீரர் 4 புள்ளிகளையும், இந்திய வீரர் அமித் பங்கால் ஒரு புள்ளியையும் பெற்றனர். இதன்மூலம், 4-க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் கொலம்பிய வீரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்த அமித் பங்கால், ஒலிம்பிக்கில் இருந்தும் வெளியேறினார்.

Next Story

மேலும் செய்திகள்