டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டி - நாக்-அவுட் சுற்றில் அடானு தாஸ் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியின் நாக்-அவுட் சுற்றில் இந்திய வீரர் அடானு தாஸ் தோல்வியைத் தழுவினார்.
x
இன்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் ஜப்பான் வீரர் ஃபுருக்கவாவை அடானு தாஸ் எதிர்கொண்டார். இதில், முதல் செட்டை கைப்பற்றி, ஜப்பான் வீரர் முன்னிலை பெற்ற நிலையில், 2-வது செட் டிரா ஆனது. 3-வது செட்டில் இலக்கை அற்புதமாக குறிவைத்து அடானு தாஸ் வெற்றி பெற்றார். இதனையடுத்து, நான்காவது செட்டும் டிரா ஆனது. வெற்றியைத் தீர்மானிக்கும் 5-வது செட் பரபரப்புடன் நடந்த நிலையில், 27-க்கு 26 என்ற கணக்கில் அதில், ஜப்பான் வீரர் வெற்றி பெற்றார். இதன்மூலம், 6-க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பான் வீரர் ஃபுருக்கவா போட்டியில் வென்றார். தோல்வியடைந்த அடானு தாஸ், ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார். 

Next Story

மேலும் செய்திகள்