டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டி - ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டி - ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில், இந்தியா 2 கோல்களும் ஜப்பான் 1 கோலும் அடித்தன. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில், ஜப்பான் தரப்பில் 2 கோல் அடிக்கப்பட, இந்தியா மேலும் 3 கோல் அடித்து அசத்தியது. இதனால், ஆட்ட நேர முடிவில் 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் காலிறுதி சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்