டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி - லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று உள்ளது.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று உள்ளது. இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில், அயர்லாந்து மகளிர் அணியை, இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியின் 57-ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்நீத் கவுர் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆட்டத்தின் போக்கை மாற்றிய இந்த ஒரு கோலால், 1-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை, இந்திய மகளிர் அணி சந்திக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்