டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்தியாவுக்கு 2-வது பதக்கம் உறுதி

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை லவ்லினா முன்னேறி உள்ளார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் உறுதியாகி உள்ளது.
x
இன்று நடைபெற்ற மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை லவ்லினா மற்றும் சீன தைபே வீராங்கனை சென் நியன் சின்னும் மோதிக் கொண்டனர். மூன்று சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில், இந்திய வீராங்கனை லவ்லினா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 4-க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம், அரையிறுதிக்கும் லவ்லினா தகுதி பெற்றுள்ளார். இதனால், இந்தியாவுக்கு 2ஆவது பதக்கம்  உறுதியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்