டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : பதக்கத்தை நெருங்கும் இந்திய வீரர்கள் யார்..? யார்..?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், பதக்கத்தை நெருங்கும் இந்திய வீரர்கள் யார், யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : பதக்கத்தை நெருங்கும் இந்திய வீரர்கள் யார்..? யார்..?
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், பதக்கத்தை நெருங்கும் இந்திய வீரர்கள் யார், யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் கால் பதித்து உள்ளார். 

இதன்மூலம் அவருக்கு பதக்க வாய்ப்பு பிரகாசமாகி உள்ள நிலையில், நாளை நடைபெறும் காலிறுதியில், ஜப்பானின் முன்னணி வீராங்கனை யமகுச்சியுடன் சிந்து மோத உள்ளார்.

இதேபோல், குத்துச்சண்ட வீராங்கனை லவ்லினா போர்ஹோஹெயினும் 69 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். நாளை நடைபெறும் காலிறுதியில் அவர் சீன தைபே வீராங்கனையை வீழ்த்தினால், இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதி.

மற்றொரு குத்துச்சண்டை வீராங்கனையான பூஜா ராணியும் 79 கிலோ எடைப்பிரிவு காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில், அவருக்கும் பதக்க வாய்ப்பு அதிகரித்து உள்ளது. குத்துச்சண்டை ஜாம்பவான் வீராங்கனையான மேரி கோம், 69 கிலோ எடைப்பிரிவு நாக் அவுட் சுற்றில் விளையாட உள்ளார். 

நாக் அவுட் சுற்றில் அவர் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வில்வித்தை ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர் அடானு தாஸ், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 

இதனால், அவருக்கும் பதக்க வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. இதேபோல், நம்பர் ஒன் வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி, மகளிர் பிரிவில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நாக் அவுட் சுற்றில் அவர் வெற்றி பெற்று, பதக்க வாய்ப்பை அதிகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும், காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. லீக் சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை இந்தியா வீழ்த்தி இருக்கிறது. இதனால், 1980-ம் ஆண்டுக்கு ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, ஹாக்கியில் இந்தியா தடம் பதிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்