டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி : காலிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி : காலிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. குரூப் ஏ பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை இந்தியா எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், 2-வது பாதியின் 43-வது நிமிடத்தில், இந்திய வீரர் வருண் குமார் பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். அடுத்த சில நிமிடங்களிலேயே அர்ஜென்டினாவும் கோல் அடித்து சமன் செய்ய ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இந்திய வீரர்கள் விவேக் சாஹர் பிரசாத் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகிய இருவரும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இதனால், ஆட்ட நேர முடிவில் 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால், காலிறுதி ஆட்டத்துக்கும் இந்தியா முன்னேறி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்