டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி : உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளின் காலிறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி : உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றி
x
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளின் காலிறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்பெயின்  வீரர் ஃபோகினாவுடன் மோதினார். ஜோகோவிச்சின் அற்புதமான ஷாட்களால் ஸ்பெயின் வீரர் தடுமாறிய நிலையில், 6-க்கு 3, 6-க்கு 1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் நிஷிகோரியுடன் ஜோகோவிச் விளையாட உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்