டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - 4 முறை தங்கப் பதக்கம் வென்றவர் மன அழுத்தத்தால் விலகிய பரிதாபம்

ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - 4 முறை தங்கப் பதக்கம் வென்றவர் மன அழுத்தத்தால் விலகிய பரிதாபம்
x
ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ்... டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டிருந்த இவர், திடீரென விலகுவதாக அறிவித்து உள்ளார். மகளிர் ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டிக்கு முன்பாக இவர் இவ்வாறு அறிவித்ததால், அமெரிக்க மகளிர் ஜிம்னாஸ்டிக் அணிக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. இதனிடையே, மன அழுத்தத்தால் ஒலிம்பிக்கில் இருந்து விலகியதாகவும், தன்னுடைய மன நலனில் கவனம் செலுத்த இருப்பதாகவும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் தெரிவித்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்