டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் : ஆக்ரோஷமாக வெற்றியை கொண்டாடிய விவகாரம் - ஆஸி. நீச்சல் பயிற்சியாளர் மன்னிப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முக கவசத்தை கழற்றி, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய நீச்சல் பயிற்சியாளர், தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முக கவசத்தை கழற்றி, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய நீச்சல் பயிற்சியாளர், தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
மகளிர் 400 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை டிட்மஸ் தங்கம் வென்றார். அமெரிக்க வீராங்கனையை பின்னுக்குத் தள்ளி அவர் வெற்றி பெற்ற நிலையில், போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய நீச்சல் பயிற்சியாளர் டீன் பாக்சல், முக கவசத்தை கழற்றி, மிகவும் ஆக்ரோஷமாக ஆஸ்திரேலிய வீராங்கனையின் வெற்றியைக் கொண்டாடினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், தனது செயல்பாட்டுக்கு மன்னிப்பு கோரியுள்ள ஆஸ்திரேலிய பயிற்சியாளர், தன்னையே மீறி இவ்வாறு செயல்பட்டுவிட்டதாக தெரிவித்து உள்ளார்.
Next Story