இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை

இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நீச்சல் வீரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.
x
இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நீச்சல் வீரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். பிரிட்டனை சேர்ந்த நீச்சல் வீரர் தாமஸ் டீன்... இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இவர், இன்று நடந்த 200 மீட்டர்  ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில், பந்தய தூரத்தை 1 நிமிடம் 44 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். வெற்றிக்கு பின்னர் பேட்டியளித்த தாமஸ் டீன், கடந்த ஒரு ஆண்டில், தான் இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது தனது ஒலிம்பிக் கனவு நனவாகி இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்