டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - ஜப்பான் வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஜப்பானை சேர்ந்த முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - ஜப்பான் வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி
x
இன்று நடந்த டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில், ஜப்பானை சேர்ந்த உலகின் 2-ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகாவும், செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வாண்டெருசோவாவும் மோதினர். இந்தப் போட்டியில் ஒசாகா எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாண்டெருசோவா 6-க்கு 1, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த தோல்வியால் ஒசாகா ஒலிம்பிக் போட்டிகளில் இருந்தும் வெளியேறி உள்ள நிலையில், சொந்த நாட்டு வீராங்கனை போட்டியில் இருந்து வெளியேறியது, ஜப்பான் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தவர், தற்போது வெளியேறி உள்ள ஒசாகா என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்