டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி - தமிழக வீரர் சரத் கமல் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தமிழக வீரர் சரத் கமல் தோல்வி அடைந்தார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தமிழக வீரர் சரத் கமல் தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை, டேபிள் டென்னிஸ் வீரரான, சீனாவின் மா லாங்கை சரத் கமல் எதிர்கொண்டார், இதில் முதல் செட்டை மா லாங் வென்ற நிலையில், இரண்டாவது செட்டை சரத் கமல் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் சரத் கமல், கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தியும், அதனை சீன வீரர் தனதாக்கினார். தொடர்ந்து 4 மற்றும் 5-வது செட்களையும் மா லாங் கைப்பற்றி போட்டியில் வென்றார். தோல்வி அடைந்த சரத் கமல் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேறினார். 

Next Story

மேலும் செய்திகள்