"ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்கள் முக கவசத்தை 30 வினாடிகள் கழற்றலாம்" - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர் - வீராங்கனைகள், புகைப்படம் எடுக்கும்போது முக கவசத்தை கழற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளித்து உள்ளது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்கள் முக கவசத்தை 30 வினாடிகள் கழற்றலாம் - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி
x
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர் - வீராங்கனைகள், புகைப்படம் எடுக்கும்போது முக கவசத்தை கழற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளித்து உள்ளது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, பதக்கம் அணியும்போது வீரர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், வீரர்களுக்கு இடையே கை குலுக்குவதை தவிர்க்குமாறும், ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், பதக்கம் வெல்பவர்கள் புகைப்படம் எடுக்கும் போது, தாங்கள் அணிந்திருக்கும் முக கவசத்தை கழற்றலாம் என்றும், 30 வினாடிகள் வரை இது அனுமதிக்கப்படும் என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்