டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி
x
டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு முன்னேறி, இந்திய வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்து, உள்ளார்.இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் உக்ரைனிய வீராங்கனை பெசோட்ஸ்காவுடன் மனிகா பத்ரா மோதினார். இதில், முதல் 2 செட்களை உக்ரைனிய வீராங்கனை வென்று அதிர்ச்சி அளித்த நிலையில், தொடர்ச்சியாக அடுத்த 2 செட்களை பத்ரா கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து 5-வது செட் உக்ரைனிய வீராங்கனை வசம் செல்ல, 6-வது செட்டில் பத்ரா அதிரடி காட்டினார். இதனால், ஆட்டத்தில் அனல் பறந்த நிலையில், 6-வது செட்டை பத்ரா தனதாக்கினார். தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 7-வது செட்டில் 11-க்கு 7 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு பத்ரா முன்னேறினார். இதன்மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்து உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்