டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி - பி.வி சிந்து அபார வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, அபார வெற்றி பெற்று உள்ளார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, அபார வெற்றி பெற்று உள்ளார். முதல் சுற்று ஆட்டத்தில் இஸ்ரேல் வீராங்கனை  செனியா போலிகரபோவாவை பி.வி. சிந்து எதிர்கொண்டார். பி.வி. சிந்துவின் சிறப்பான ஆட்டத்தால் இஸ்ரேல் வீராங்கனை திணறிய நிலையில், 21-க்கு 7, 21-க்கு 10 என்று அடுத்தடுத்து 2 செட்களைக் கைப்பற்றி பி.வி. சிந்து எளிதில் வெற்றி பெற்றார். இதன்மூலம், அடுத்த சுற்றுக்கும் அவர் முன்னேறினார். 

Next Story

மேலும் செய்திகள்