ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பு - மேரி கோம், மன்பிரீத்திற்கு கொடி கவுரவம்

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை மேரி கோம் மற்றும் மன்பிரீத் சிங் ஏந்திச் செல்லவுள்ளனர்...
ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பு - மேரி கோம், மன்பிரீத்திற்கு கொடி கவுரவம்
x
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை மேரி கோம் மற்றும் மன்பிரீத் சிங் ஏந்திச் செல்லவுள்ளனர்... இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். கடந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக தள்ளி போனது.. இந்நிலையில், நீண்ட காத்திருப்புகளுக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது... மொத்தம் 206 அணிகளுடன் சேர்த்து அகதிகள் அணி என பல நாடுகளை சேர்ந்த அணிகள் இந்த போட்டியில் களமிறங்க உள்ளனர்.
இந்தியா சார்பில் 63 வீரர்கள், 52 வீராங்கனைகள் என மொத்தம் 115 பேர் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது ஒவ்வொரு நாட்டின் அணி சார்பிலும் ஒருவர் மட்டுமே தேசியக் கொடி ஏந்தி செல்வது வழக்கம். 
ஆனால் இம்முறை இந்த வழக்கத்தை மாற்றி அமைத்துள்ளது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.... ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் ஒரு வீரர் மற்றும் ஒரு வீராங்கனை என இருவர் தேசிய கொடியை ஏந்தி செல்ல அனுமதி வழங்கியிருந்தது... இந்த அறிவிப்பின் படி, முதலாவதாக பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில், இந்திய அணி சார்பில் தேசிய கொடியை ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமும், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கும் மூவர்ண கொடியை ஏந்தி செல்ல உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்