பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி- நவாமி ஒசாகா விலகுவதாக அறிவிப்பு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக பிரபல டென்னிஸ் வீராங்கனை நவாமி ஒசாகா விலகியதன் பின்னணி என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி- நவாமி ஒசாகா விலகுவதாக அறிவிப்பு
x
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் 2-ம் இடம் பிடித்திருக்கும் நவாமி ஒசாகா ஜப்பானை சேர்ந்தவர்.ஒரே போட்டியிலேயே உலகையே தன்னை திரும்பி பார்க்க வைத்தவர்... ஏனென்றால் 2018-ல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், டென்னிஸ் உலகின் முடிசூடா ராணியாக விளங்கிய செரீனா வில்லியம்சையே நேட் செட்களில் வீழ்த்தி பட்டத்தை வென்றவர். செரீனாவுக்கு முன்பாக 20 வயதில் ஒரு கத்துக்குட்டியாக களமிறங்கிய ஒசாகா, ஒன்னேகால் மணி நேரங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது ஆச்சர்யப்படுத்தினார். இதனையடுத்து 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஒசாகா, வெற்றி பயணத்தில் நம்பர் 1 நிலைக்கும் உயர்ந்தவர். தற்போது சர்ச்சையால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.பாரீசில் ஞாயிற்று கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ருமேனியாவின் மரியா டிக்குடன் மோதி வெற்றி அடைந்தார்.வழக்கத்திற்கு மாறான அவரது இந்நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளானது. விதிமுறைக்கு முரணாக நடந்துக் கொண்ட ஒசாகாவுக்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போட்டியில் இருந்து ஒசாகா நீக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து மற்ற வீரர்கள் செய்தியாளர்களிடம் பேசியதை சுட்டிக் காட்டி, ஒசாகாவை விமர்சிக்கும் வகையில் பிரெஞ்சு ஓபன் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடப்பட்டது. இதற்கு முன்னாள் வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் பதிவு நீக்கப்பட்டது.இந்த நிலையில்தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார், ஒசாகா.
இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் ஒசாகா, 2018 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தே தான்  மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்றும் அதிலிருந்து மீள போராடி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தன்னை அறிந்த எல்லோருக்கும் தான் திடமான சிந்தனை கொண்டவள் என்பது தெரியும் என்றும் ஒசாகா பதிவிட்டுள்ளார். ஒசாகாவுக்கு செரீனா வில்லியம்ஸ் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
23 வயதாகும் ஒசாகா உலகில் அதிகமாக வருவாய் ஈட்டும் இளம் வீராங்கனையும் ஆவார்...  கடந்த 2019-ல் மட்டும் அவர் குவித்த தொகை ரூ. 284 கோடியாகும்...


Next Story

மேலும் செய்திகள்