பெங்களூரு - கொல்கத்தா போட்டி ஒத்திவைப்பு - கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா

இன்று நடைபெற இருந்த பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
x
இன்று நடைபெற இருந்த பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. போட்டி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்