ஐ.பி.எல் ரசிகர்களுக்கு ஓர் சோக செய்தி "எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது"

ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஐ.பி.எல் ரசிகர்களுக்கு ஓர் சோக செய்தி எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது
x
ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.2021 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் தொடங்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்ற தொடரை போல இல்லாமல், இந்த ஐ.பி.எல் தொடரில் ஓர் வினோத முயற்சியை மேற்கொண்டுள்ளது பிசிசிஐ...அதன் படி, எந்த அணியும், அதன் சொந்த மண்ணில் விளையாடாது. உதாரணமாக சென்னை மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னையிலோ அல்லது மும்பையிலோ நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை, சென்னை மும்பை தவிர்த்து வேறு மைதானத்தில் தான் போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழலில் இந்திய மண்ணில் போட்டியை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள பிசிசிஐ, ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளது.சேப்பாக்கம் மைதானம் உள்பட மொத்தம்  6 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இதில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ப்ளே ஆப் சுற்றுகளும், மே 30 ஆம் தேதி இறுதி போட்டியும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.சென்னையை சூப்பர் கிங்ஸ் அணி, 10 ஆம் தேதி டெல்லி அணியுடன் மும்பை மைதானத்தில் தங்கள் ஆட்டத்தை தொடங்குகிறது. 


Next Story

மேலும் செய்திகள்