விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறும் ஆஸ்திரேலியா - நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் 2 வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறும் ஆஸ்திரேலியா - நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா
x
முதல் இன்னிங்சில் பும்ரா மற்றும் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களில் சுருட்டிண்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் டக் அவுட் ஆகி மீண்டும் சொதப்பினார். இருந்தபோதும் அடுத்து வந்த வீர‌ர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்த‌னர். குறிப்பாக, கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரகானே, சதம் விளாசினார். இதனால் விக்கெட் வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது.  இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி, 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 277 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே, 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்