முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை - சுருண்ட ஆஸ்திரேலிய அணி
பதிவு : டிசம்பர் 18, 2020, 07:04 PM
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி சுருண்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 74 ரன்கள் குவித்திருந்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அத்துடன் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தற்போது இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர் பிருத்வி ஷா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1307 views

பிற செய்திகள்

இந்தியா-ஆஸி கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இந்தியா த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் வென்று உள்ளது.

18 views

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் கலக்கும் சுந்தர் - அனுபவவீரரைப் போல் அட்டகாச பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்.

35 views

இந்தியா-ஆஸி. கடைசி டெஸ்ட் போட்டி- 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ்

பிரிஸ்பேனில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற 328 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்து உள்ளது.

11 views

நடராஜனை ஜாலியாக கலாய்த்த அஸ்வின்

வலைப்பயிற்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற தமிழக வீர‌ர் நடராஜன், பல வீர‌ர்களின் காயம் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியிலும் இடம் பிடித்தார்.

7108 views

இந்தியா-ஆஸி கடைசி டெஸ்ட் போட்டி - அறிமுக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா, தனது முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

14 views

இந்தியா Vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் -நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.