பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் 244 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது

அடிலெய்டு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் 244 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது.
பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் 244 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது
x
அடிலெய்டு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் 244 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் சேர்த்து இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய அணி 244 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. 11 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் தாரை வார்த்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சற்று முன்புவரை 1 விக்கெட்டை இழந்து 16 ரன்களை சேர்த்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்