"எனக்கு கோவமெல்லாம் வராது, எப்போதும் சிரிப்பு தான்" - ஆஸ்திரேலிய மண்ணில் தமிழில் பேசிய நடராஜன்
அறிமுக தொடரிலே அசத்திய தமிழக வீரர் நடராஜன் சிட்னி மைதானத்தில் இருந்தவாறு தமிழகத்தை சேர்ந்த வர்ணனையாளர் முரளி கார்த்திக்குடன் உரையாடினார்.
அறிமுக தொடரிலே அசத்திய தமிழக வீரர் நடராஜன், சிட்னி மைதானத்தில் இருந்தவாறு, தமிழகத்தை சேர்ந்த வர்ணனையாளர் முரளி கார்த்திக்குடன் உரையாடினார். அப்போது சர்வதேச போட்டிகளில் விளையாடும் போதும் நடராஜன் சர்வ சாதாரணமாக இருப்பது குறித்து முரளிகார்த்திக் வியப்புடன் கேள்வி எழுப்பினார். அதற்கு நடராஜன், எனக்கு கோவமெல்லாம் வராது அண்ணா, சிரித்து விட்டு நகர்ந்துவிடுவேன் என வெகுளியாக பதில் அளித்தார். இதேபோல தன் முதல் தொடர் எப்படி இருந்தது என்பது குறித்து மேலும் பல தகவல்களையும் நடராஜன் வெளியிட்டார்.
Next Story