ஆஸி.யை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா - 2 போட்டிகளில் தோற்ற நிலையில், ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸி.யை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா - 2 போட்டிகளில் தோற்ற நிலையில், ஆறுதல் வெற்றி
x
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, மெனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிரடியாக  பேட்டிங் செய்த ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். கேப்டன் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதையடுத்து 2வது பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 289 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 2 போட்டிகளில் தோல்வியை சந்திருந்த இந்திய அணி, இன்று ஆறுதல் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆட்டநாயகன் விருதும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்துக்கு தொடர் நாயகந் விருதும் வழங்கப்பட்டது. தமிழக வீரர் நடராஜன் அறிமுகமான முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


Next Story

மேலும் செய்திகள்