2021 டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் - கங்குலி
பதிவு : நவம்பர் 12, 2020, 08:17 PM
சர்வதேச டி20 உலகக் கோப்பை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்
நடப்பு ஆண்டில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் எந்த நாட்டில் அந்தத் தொடர் நடத்தப்படும் என ஐசிசி அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை நடத்த திட்டமிட்டுள்ளன. அடுத்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தத் தொடர் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து என மொத்தம் 16 சர்வதேச அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இது மிகவும் பெருமையான ஒன்று என சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட்டை விரும்பும் நமது நாட்டில் விளையாடுவதால் உலக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

இந்தியா - ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மவுன அஞ்சலி - மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை

மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

9 views

போர்ச்சுகல் கிராண்ட் பிரி மோட்டர் சைக்கிள் பந்தயம் - முன்னணி போர்ச்சுகல் வீரர் ஆலிவெய்ரா பட்டம் வென்றார்

போர்ச்சுகல் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் முன்னணி வீரர் மிகல் அலிவெய்ரா வெற்றி பெற்றார்

22 views

ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரஷ்ய வீரர் மெட்வெடேவ் சாம்பியன்

டாப் 8 வீரர்கள் பங்கு பெறும் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கிளைமாக்ஸ் லண்டனில் நடந்தது.

17 views

லண்டன் "ஏடிபி பைனல்ஸ்" டென்னிஸ் தொடர்- அரையிறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வரும், ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், முன்னணி வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

108 views

லங்கா பிரிமியர் லீக் - தமிழில் பாடல் - ஐசிசி வெளியிட்ட வீடியோ

இலங்கை நடத்தும் 20 ஓவர் போட்டியான லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான பாடல் வெளியிட பட்டுள்ளது.

2597 views

ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரபேல் நடால் அரைஇறுதிக்கு தகுதி

ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் நடால் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.