ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசு அனுமதி - ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் தகவல்

ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசு அனுமதி - ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் தகவல்
x
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரை, அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்றது. இந்நிலையில் மத்திய அரசும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபில் தொடரை நடத்த பிசிசிஐக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்