ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் - மைதானத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா?

இந்த ஆண்டு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் குறித்து பார்க்கலாம்..
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் - மைதானத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா?
x
மைதானத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தவே, ஐ.பி.எல் தொடருக்கென பிரத்யேக சத்தம் உள்ளது. அந்த சத்தம் எழுப்பிய உடன் அரங்கமே அதிரும்.
ஆனால், இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவிலும் இல்லை, இப்படி ஆரவாரமும் இருக்க வாய்ப்பில்லை... காரணம் ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தேதி இன்னும் முடிவு  செய்யப்படவில்லை என்றாலும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் பாதுகாப்பு குறித்து தற்போது உறுதி செய்யவில்லை என்றாலும், மைதானத்துக்குள்  ரசிகர்களை அனுமதிப்பது குறித்தும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக, ஐக்கிய அரசு அமீரக கிரிக்கெட் வாரியம், மற்றும் சர்வதேச கிரிக்கெட் சங்கம் இணைந்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. ஐக்கிய அரசு அமீரக பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் இருந்தால், ரசிகர்கள் இன்றி பூட்டப்பட்ட  மைதானத்தில் போட்டி நடைபெறலாம். வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்துவிடுவார்கள் என்றும், இந்திய வீரர்கள் மூன்று முதல் நான்கு வாரங்கள் அங்கு தங்குவார்கள் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது. வர்ணனையாளர்கள் வீட்டில் இருந்தே வர்ணனை செய்ய ஏற்பாடு செய்யப்டும் என கூறப்படுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் , இதற்கு முன் 2009 ஆம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டு அங்கு முழுமையாக நடத்தப்பட்டது.
அதேபோல, 2014 ஆம் ஆண்டில் ஐ.பி.எல் தொடக்க ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துள்ளன.ஐபிஎல் போட்டியை நடத்த  இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் அழைப்பு விடுத்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  மைதானத்தில் கிடைக்கும் கொண்டாட்டத்தை அனுபவித்த  ரசிகர்களுக்கு, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஏமாற்றமாகவே  இருக்கும் என்றால் மிகையில்லை.

Next Story

மேலும் செய்திகள்