சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி-20 தொடர் - இந்திய ஜாம்பவான்கள் அணி வெற்றி

சாலை பாதுகாப்பு குறித்து மும்பையில் நடக்கும் விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில், இந்திய ஜாம்பவான்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் அணியை வீழ்த்தியது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி-20 தொடர் - இந்திய ஜாம்பவான்கள் அணி வெற்றி
x
சாலை பாதுகாப்பு குறித்து மும்பையில் நடக்கும் விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில், இந்திய ஜாம்பவான்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் அணியை வீழ்த்தியது. ஒய்வு பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய சச்சினையும், சேவாக்கையும் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய ஜாம்பவான்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். யுவராஜ் சிங் அடித்த இமலாய சிக்ஸருக்கு, ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம், அரங்கையே அதிரச் செய்தது. முடிவில், 18 புள்ளி 2 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து இந்திய ஜாம்பவான்கள் அணி வெற்றி பெற்றது. போட்டியில் ஜாகிர் கான் செய்த அற்புத கேட்ச் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்