ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - இறுதிபோட்டியில் சென்னை அணி
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின், இறுதி போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின், இறுதி போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது. நேற்றிரவு கோவா படோர்டா கால்பந்து அரங்கில் நடைபெற்ற இரண்டாவது கட்ட அரையிறுதி ஆட்டத்தில் சென்னை - கோவா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய கோவா அணி 2 கோல் அடித்தது. இரண்டாம் பாதியில் சென்னை மற்றும் கோவா அணிகள் தலா 2 கோல் அடித்தன. போட்டியில் கோவா அணி 4க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போதிலும், முதற்கட்ட அரையிறுதி ஆட்டத்தையும் சேர்த்து 6க்கு 5 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த சென்னை அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
Next Story

