ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரையும் கைப்பற்றியது.
ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி
x
Bloemfontein நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. வார்னர் 35 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச், டார்சி ஷார்ட் தலா 69 ரன்களும் குவிக்க, 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி கிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டி காக் டக் அவுட்டாக, இளம் வீரர் மாலன் 129 ரன்கள் விளாசினார். அதிரடி வீரர் கிளாசன் அரைசதமும், டேவிட் மில்லர் 37 ரன்களும் சேர்க்க தென்னாப்பிரிக்க அணி 48 புள்ளி 3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணி தொடரை வென்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்