"இந்தியா Vs நியூசி. இன்று 2வது டெஸ்ட் போட்டி : இஷாந்த் சர்மா பங்கேற்க மாட்டார் என தகவல்"

தொடரை சமன் செய்ய இந்திய அணி தீவிரம்
இந்தியா Vs நியூசி. இன்று 2வது டெஸ்ட் போட்டி : இஷாந்த் சர்மா பங்கேற்க மாட்டார் என தகவல்
x
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. 
தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.  கேப்டன் கோலி, புஜாரா, பந்து வீச்சாளர்கள் பும்ரா ஆகியோர் சாதிக்க தவறி வருவது இந்திய ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. பயிற்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே, 2வது டெஸ்ட் போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.  இதனிடையே காயம் காரணமாக இஷாந்த் சர்மா இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்