"ஒரு ஆண்டாக கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்கவில்லை"- தோனி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து

ஒரு ஆண்டாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காத தோனியை, இந்திய அணியில் தேர்வு செய்வது நியாயமல்ல என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண்டாக கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்கவில்லை- தோனி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து
x
 உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில்தேவ்விடம்,  உலகக் கோப்பை இருபது ஓவர் போட்டியில் தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கபில்தேவ், ஒரு ரசிகனாக தோனி இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்தார். ஆனால், ஒரு ஆண்டாக எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காத தோனியை, நேரடியாக இந்திய அணியில் தேர்வு செய்வது நியாயமல்ல என்றும் கபில்தேவ் சுட்டிக்காட்டினார். தோனி அதிக போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் கபில்தேவ் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்