ஃபார்ம் அவுட் ஆகிவிட்டாரா கோலி ?

கடந்த 20 இன்னிங்சில் சதம் விளாச முடியாமல் திணறிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபார்ம் அவுட் ஆகிவிட்டாரா கோலி ?
x
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த ஒரு ஆண்டாக ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி , நியூசிலாந்திடம் வீழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் சிறந்த பேட்ஸ்மன் கோலி, சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா அணியில் இருந்தும் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

இந்திய வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. போட்டியின் முதல் இன்னிங்சில் 50 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா  தத்தளித்தது. குறிப்பாக கோலி முதல் இன்னிங்சில் 2 ரன்னிற்கும், 2வது இன்னிங்சில் 19 ரன்னிற்கும் ஆட்டமிழந்தார். வெளிநாட்டு மண்ணில் இந்திய கேப்டன் சொதப்பியதால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

கடந்த 20 இன்னிங்சில் சதம் அடிக்க தவறியதால் கோலி ஃபார்ம் அவுட் ஆகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிக பணி சுமையே கோலியின் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை தொடரில் தோற்ற பின்னர் இந்திய அணி தொடர்ச்சியாக தொடர்களில் விளையாடி வருகிறது. 
ஓவ்வொரு தொடரிலும் சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் , கேப்டன் கோலி மட்டும் ஓய்வின்றி அனைத்து போட்டியிலும் பங்கேற்று விளையாடி வருகிறார். இதனால் அவரது இயல்பான ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வருகிற மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா தொடரில் கோலி ஓய்வெடுத்து , தனது பழைய ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்