"பயன்பாட்டில் இல்லாத ஐ , ஜே , கே கேலரிகள் : ஐ.பி.எல் போட்டிக்காக மார்ச் மாதம் திறக்க திட்டம்"

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஐ, ஜே மற்றும் கே கேலரிகளை திறக்க, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயன்பாட்டில் இல்லாத ஐ , ஜே , கே கேலரிகள் : ஐ.பி.எல் போட்டிக்காக மார்ச் மாதம் திறக்க திட்டம்
x
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, சேப்பாக்கம் மைதானத்தில், 12 ஆயிரம் இருக்கைகளுடன் ஐ, ஜே, கே என கூடுதலாக மூன்று கேலரிகள் அமைக்கப்பட்டது.  ஆனால் இந்த கேலரிகளை அமைக்க, அரசிடம் உரிய அனுமதி பெறவில்லை என்றும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் கூறி சென்னை மாநகராட்சி சீல் வைத்தது. மேலும், கேலரிகள் இடையேயான இடைவெளி 8 மீட்டராக இருக்கவேண்டும், ஆனால் 5 புள்ளி 4 மீட்டராக, இருந்ததால் அந்த கேலரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி வழங்கவில்லை. எனவே, இந்நிலையில் கேலரிக்கு இடையேயான, இடைவெளியை சரியான முறையில் அமைத்து, மூன்று கேலரிகளையும், திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்