கிரிக்கெட்டில் இருந்து இர்ஃபான் பதான் ஓய்வு

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து இர்ஃபான் பதான் ஓய்வு
x
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது கிரிக்கெட் பயணம் திருப்திகரமாக அமைந்திருந்ததாக தெரிவித்துள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான்,  29 டெஸ்ட், 120 ஒருநாள் போட்டிகள், 24 டி-20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 301 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 2 ஆயிரத்து 821 ரன்களும் சேர்த்துள்ளார். கடைசியாக 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர், டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில், இர்பான் பதான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்