"ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் : பெயிண்டர் மகனை ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ்"

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஒசூர் பெயிண்டரின் மகனை 20 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் : பெயிண்டர் மகனை ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ்
x
ஒசூரை சேர்ந்த பெயிண்டர் ராம்சிங் யாதவின் மகன் சஞ்சய் யாதவ்.  இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர்,  2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் திருவள்ளுவர் வீரன்ஸ் அணியில் அறிமுகமானார்.  2017ஆம் ஆண்டு  20 ஓவர் போட்டியில் தமிழ்நாடு அணிக்காகவும் அதே ஆண்டில்   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் அவர் விளையாடி உள்ளார். இந்நிலையில்  கிரிக்கெட் வீரர் சஞ்சய் யாதவை,  சன்ரைஸ் ஹைதராபாத் அணி, ஐ.பி.எல். போட்டியில் விளையாட 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதனை அவரது பயிற்சியாளர் மற்றும்  நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்