"இந்தியா VS வெ.இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி"

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா VS வெ.இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
x
விஷாகபட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 159 ரன்களும், கே.எல் ராகுல்102 ரன்கள் விளாச இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 43புள்ளி 3 ஓவர்கள் விளையாடி 280 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தது. இதன் வெற்றியின் மூலம், இந்தியா  தொடரை1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

Next Story

மேலும் செய்திகள்