இந்தியா Vs வங்கதேசம் 2-வது டெஸ்ட் போட்டி : 2-வது இன்னிங்சில், வங்கதேசம் 152/6 ரன்கள் சேர்ப்பு
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
2-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, விராட் கோலியின் அபார சதம், ரகானேவின் அரைசதம் உதவியுடன் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்து, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
246 ரன்கள் பின்னடைவில், 2-வது இன்னிங்சை ஆடிய வங்கதேசம், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 13 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. முஷ்பிகுர் ரஹிம் - மகமதுல்லா ஜோடி நிலைத்து ஆட, வங்கதேச அணி சற்று தப்பித்தது .
2 ஆம்நாள் ஆட்டநேர முடிவில், அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணி வசம் இன்னும் 4 விக்கெட்கள் மட்டுமே உள்ளதால், இந்தியா போட்டியில் வெற்றிபெற்று, 2க்கு - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுவது உறுதியாகி விட்டது.
Next Story