இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் : புதுமுக வீரர் துபேவுக்கு ஒரு நாள் அணியில் இடம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் : புதுமுக வீரர் துபேவுக்கு ஒரு நாள் அணியில் இடம்
x
வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியா சுற்றுப் பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.  

டி 20க்கான இந்திய அணியில் விராட் கோலி தலைமையின் கீழ், ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பாண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், தீபல் சஹார், முகம்மது சமி, புவனேஷ் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பாண்ட், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், தீபக் சஹார், முகம்மது சமி, புவனேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர், இந்த தொடர் அடுத்த மாதம் 6 தேதி மும்பையில் தொடங்குகிறது..

Next Story

மேலும் செய்திகள்