இந்தியா Vs வங்கதேசம் முதல் டெஸ்ட் : அதிவேக 250 விக்கெட் - அஷ்வின் அசத்தல்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா Vs வங்கதேசம் முதல் டெஸ்ட் : அதிவேக 250 விக்கெட் - அஷ்வின் அசத்தல்
x
இந்தூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள்தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசி , வங்கதேச வீரர்களை திணறடித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக ரஹிம் 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்கதேசம் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்தியா  முதல் இன்னிங்சை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும், புஜாரா 43 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த இன்னிங்சில் இரண்டு விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் அஷ்வின் உள்ளூரில் 42 போட்டிகளில் அதிவேகமாக 250 விக்கெட்கள் வீழ்த்திய இலங்கை வீரர் முரளிதரனின் சாதனையை சமன் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்