இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா : இன்று 2- வது டி20 கிரிக்கெட் போட்டி

இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி புதன்கிழமையன்று மொகாலியில் நடக்கிறது.
இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா : இன்று 2- வது டி20 கிரிக்கெட் போட்டி
x
இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி  புதன்கிழமையன்று மொகாலியில் நடக்கிறது. இரவு 7 மணிக்கு, இந்த போட்டி துவங்கும். போட்டிக்காக மொகாலி மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர  வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் குவிண்டன் டி காக் , பந்து வீச்சாளர் ரபாடா , இந்திய கேப்டன் விராட் கோலி இடையேயான மோதலை அனைவரும் எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்தார். மழை காரணமாக முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், 2 - வது போட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்