டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5-வது வெற்றி
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 01:23 AM
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில் , டாஸ் வென்று முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19 புள்ளி 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் சேர்த்தது. பொறுப்பாக ஆடிய கோபிநாத் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இதை தொடர்ந்து 128 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய தூத்துக்குடி அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறியது. இறுதியாக 18 புள்ளி 5 ஒவர்கள் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து தூத்துக்குடி அணி, தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.