திண்டுக்கல் அணியை வீழ்த்தியது கோவை

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், திண்டுக்கல் அணியை 99 ரன்களில் சுருட்டி கோவை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
திண்டுக்கல் அணியை வீழ்த்தியது கோவை
x
நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி, முதலில் பேட் செய்தது. தொடக்கம், சிறப்பாக அமைந்தாலும், பின்னால் வந்த வீர‌ர்கள் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்த‌டுத்து வெளியேறினர். இதனால், அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில்104 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை அணியின் வீரர் ரஞ்சன்பால், அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணியின் பிரானேஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை தொடர்ந்து 105 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு, கோவையின் பந்துவீச்சு சவாலாக இருந்தது. தொடக்க வீரர்கள் இருவரும், முதல் ஓவர் வீசிய அஜித் ராம் பந்து வீச்சில் சாய்ந்தனர். நடராஜனும் 2 விக்கெட்டுகளை வெளியேற்றினார். இதனால் நிலை குலைந்த திண்டுக்கல் அணி, 99 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. கோவை அணியின் நடராஜன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்