தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டி - பெண்கள் பிரிவில் சென்னை அணி 2 ஆம் இடம்

புதுச்சேரியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.
தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டி - பெண்கள் பிரிவில் சென்னை அணி 2 ஆம் இடம்
x
புதுச்சேரியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார். கடந்த 24ஆம் தேதியன்று  ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் பெண்கள் பிரிவில் தலச்சேரி சாய் அணி முதலிடத்தையும், சென்னை சாய் அணி 2 ஆம் இடத்தையும் பிடித்த‌து.  இதேபோல் ஆண்கள் பிரிவில் சாய் கோழிக்கோடு அணி முதலிடத்தை பிடித்த‌து.  வெற்றிபெற்ற அணிகளுக்கு புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்