ஜிம்பாப்வே அணிக்கு தடை - வீர‌ர்கள் அதிர்ச்சி
பதிவு : ஜூலை 20, 2019, 12:57 PM
ஜிம்பாப்வே அணிக்கு இடைக்கால தடை விதித்துள்ள ஐசிசி, சர்வதேச கிரிக்கெட்டில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த‌து. இதுகுறித்து லண்டனில் நேற்று நடைபெற்ற ஐ.சி.சி ஆண்டு இறுதி குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், ஜிம்பாப்வே அணி, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான ஜிம்பாப்வே அணி வீர‌ர்கள் பலரும், தொடர்ந்து தங்களது அதிருப்தி குரலை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜிம்பாப்வே அணிக்கு ஆதரவாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். 

மற்றொரு முக்கிய முடிவு, விளையாட முடியாத அளவிற்கு காயம் அடையும் வீர‌ர்களுக்கு, மாற்றாக வீர‌ர்கள், பந்துவீசவும், பேட்டிங் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மாற்றுவீர‌ராக களமிறங்கும் வீர‌ர்கள் பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த‌து. நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் ஜோபர் ஆர்ச்சர் வீசிய பந்தில்,  ஆஸ்திரேலிய வீர‌ர் அலேக்ஸ் ஹேரியின் ஹெல்மட் பறந்த‌து. தாடையில் காயம் ஏற்பட்டும், மாற்றுவீர‌ருக்கு பேட்டிங் வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால் அவர் தொடர்ந்து பேட் செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதுபோன்ற நெருக்கடி நிலைகளை சமாளிக்கவும், வீர‌ர்களின் நலன் கருதியும் மாற்றுவீர‌ர்களுக்கு பேட்டிங் செய்யவும் பந்துவீசவும் அனுமதிக்க வேண்டும் என பல நாடுகளும் ஐ.சி.சியிடம் கோரிக்கை விடுத்திருந்தன. அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதேபோல விதிமீறல்களுக்காக இனி கேப்டன்கள் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது. அணியில் ஏதேனும் விதி மீறல்கள்  நடந்தால், அணியில் உள்ள ஒவ்வொரு வீர‌ரும் பொறுப்பேற்க வேண்டும் என ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

'தல' தோனியின் 38-வது பிறந்த நாள்... மனைவி குழந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான தோனியின் 38-வது பிறந்தநாள் இன்று.

270 views

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை

உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

67 views

இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கிரிக்கெட் : அரசியல் களத்தில் திறமையை நிரூபித்தவர்கள், கிரிக்கெட் களத்தில்..

இங்கிலாந்தில் ஐசிசி உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது

52 views

பிற செய்திகள்

"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது" - பன்னீர் செல்வம்

தன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

120 views

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

792 views

பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

47 views

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

78 views

கன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.