ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரம் - பதிலளிக்க ஐசிசி மறுப்பு

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதிய உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திற்கு ஓவர் த்ரோ மூலம் 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க ஐசிசி மறுத்துள்ளது.
ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரம் - பதிலளிக்க ஐசிசி மறுப்பு
x
போட்டியின் இறுதி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் மிட் விக்கெட் திசையில் பந்தை அடித்து விட்டு இரண்டு ரன்கள் எடுக்க ஓடினார். பந்தை பிடித்த கப்தில் விக்கெட் கீப்பரை நோக்கி வீச , ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்து பவுண்டரிக்கு சென்றதால் மொத்தம் ஆறு ரன்கள் வழங்கப்பட்டது. ஆனால் விதிப்படி 5 ரன்கள் மட்டுமே வழங்கியிருக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நடுவர்கள் பலர் தெரிவித்திருந்தனர். இது குறித்து ஐசிசி அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்ட போது கள நடுவர்கள் முடிவு குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்