குவைத் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த முதல் தமிழர்

ராசிபுரத்தை அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்த நெசவாளர் மகன் குவைத் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
குவைத் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த முதல் தமிழர்
x
ராசிபுரத்தை அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் வரதப்பன். நெசவாளரின் மகனான இவர், இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்ற கனவோடு நான்காம் வகுப்பு படிக்கும்போதே பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். முதல்தலைமுறை பொறியியல் பட்டதாரியான அவர் , குவைத் நாட்டில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். அங்கும் அவருக்கு கிரிக்கெட் மீதான தாகம் தீராமல், வேலை நேரம் முடிந்து பிறகு  சொந்தமாக கிரிக்கெட் வலைகள் அமைத்து, இரவு நேரங்களில் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.  அதன் விளைவாக , பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் வீரர்கள்ஆதிக்கம் செலுத்தி வந்த குவைத் கிரிக்கெட் அணியில் அவர் இடம் பிடித்துள்ளார். குவைத் அணியில் சேர்ந்த முதல் தமிழர் என்ற பெருமையையும் சங்கர் வரதப்பன் பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்