ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - இந்தியா அணி த்ரில் வெற்றி...

உலக கோப்பை லீக் போட்டியில், ஆப்கானிஸ்தனை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - இந்தியா அணி த்ரில் வெற்றி...
x
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி பொறுப்பாக விளையாடி 67 ரன்கள் எடுத்தார். ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. 225 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஒவரில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்ட போது ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்