ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸ்திரேலியா - இந்தியா பலப்பரீட்சை...

ஐ.சி.சி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸ்திரேலியா - இந்தியா பலப்பரீட்சை...
x
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 136 போட்டிகளில் மோதியுள்ளன.இதில் ஆஸ்திரேலியா 77 போட்டிகளிலும்,இந்தியா 49 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.10 ஆட்டங்கள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டன. உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.இதில் இந்தியா 3 முறையும்,ஆஸ்திரேலியா 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 

கடந்த 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில், இந்தியா இரண்டு முறை ஆஸ்திரேலியாவை சந்தித்தது.செஞ்சுரியனில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியாவை ,அஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இருப்பினும் தொடர் முழுவதும் கங்குலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது.முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 359 ரன்கள் எடுத்தது.இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா 234 ரன்களுக்கு ஆட்டமிழந்து கோப்பையை நழுவ விட்டது.



2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் காலிறுதிப்போட்டியில் நான்கு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது.ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடரும் என்று கூறிய கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பை முறியடித்து இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.மேலும் இறுதிப்போட்டியில் இலங்கையை, இந்தியா வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுடன்,சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றது.



2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா, அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு வெளியேறியது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா,அணியில் மாற்றமின்றி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்திய வீரர்கள் விவரம்...

ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், தோனி, புவனேஷ்வர் குமார், யுஷ்வேந்திர சகல்,குல்தீப் யாதவ்,பும்ரா



ஆஸ்திரேலிய வீரர்கள் விவரம் ...

டேவிட் வார்னர்,ஆரோன் பிஞ்ச்,உஸ்மான் கவாஜா,ஸ்டீவ் ஸ்மித்,மேக்ஸ்வெல்,ஸ்டொயினிஸ்,அலெக்ஸ் கேரி,கவுல்டர் நிலே,மிட்சல் ஸ்டார்க்,பேட் கம்மின்ஸ்,ஆடம் ஜாம்பா.



முக்கிய வீரர்கள்...

ஆஸ்திரேலியா - வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டார்க், ஜாம்பா.



இந்தியா - கோலி, ஹர்திக் பாண்டியா, தோனி, பும்ரா, குல்தீப் யாதவ்.



சம பலம் கொண்ட இரு அணிகள் மோதும் இந்த  ஆட்டத்தை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்